சினிமா செய்திகள்
ஆர்யா-சாய்ஷா தம்பதிக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி: விஷால் வாழ்த்து!

பிரபல நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் ஒன்றாக ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்கள் என்பதும் அப்போது இருவரும் காதலித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில் சாயிஷா கர்ப்பம் ஆனதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் நேற்று சாயிஷாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்து இருப்பதாக தெரிகிறது. இது குறித்து ஆர்யா மற்றும் சாயிஷா தங்களது டுவிட்டர் பக்கங்களில் அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் ஆர்யாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த தகவலை தெரிவித்து உள்ளார்.
ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் எனது மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்றே இல்லை என்றும் என்றும் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் ஆர்யா தற்போது ஒரு பொறுப்புள்ள தந்தையாக மாறிவிட்டார் என்றும் அதற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் ஆர்யா நடித்த ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தால் இன்னொரு மகிழ்ச்சியும் சேர்ந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா தற்போது ‘எனிமி’ மற்றும் ’அரண்மனை 3’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த இரண்டு படங்களும் இவ்வருடமே வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
So Happy to break this news,great to be an Uncle,my Bro Jammy & Sayyeshaa r blessed wit a #BabyGirl,uncontrollable emotions rite now in midst of shoot.Always wish de best 4 dem,Inshallah,GB de new Born,my Baby Girl @sayyeshaa & @arya_offl for taking a new responsibility as a Dad
— Vishal (@VishalKOfficial) July 23, 2021

















