பிற விளையாட்டுகள்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனையின் வரலாற்று சாதனை!

கடந்த சில நாட்களாக நார்வே நாட்டில் மகளிருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு இதுவரை எந்த இந்திய வீராங்கனையும் தகுதி பெற்றது இல்லை என்ற நிலையில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதோடு, வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
57 கிலோ எடைப்பிரிவில் நடந்த மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் அவர்களுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 19 வயதே ஆன அன்ஷூ மாலிக் முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றதை அடுத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதும் வேறு எந்த வீராங்கனையும் இதுவரை சாம்பியன் பட்டம் பெற்றதில்லை என்ற நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 59 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை சரிதா என்பவர் ஸ்வீடன் நாட்டின் வீராங்கனை இடம் தோல்வி அடைந்ததை அடுத்து வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் இரண்டு இந்திய வீராங்கனைகள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை பெற்றதையடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.















