தமிழ்நாடு
தேமுதிகவுடன் கூட்டணி இல்லை: 195 வேட்பாளர்களை அறிவித்த அமமுக!

அதிமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை என்றும், இதனை அடுத்து தேமுதிக தனித்து போட்டியிடப் போவதாகவும் செய்திகள் வெளியானது..
இந்த நிலையில் அமமுக-தேமுதிக கூட்டணி இல்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அமமுக சார்பில் 65 பேர் கொண்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்றுமுன் 130 பேர் கொண்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து மொத்தம் 195 வேட்பாளர்களை அமமுக அறிவித்து விட்டதால் தேமுதிகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியாகி விட்டது.
இதனை அடுத்து அதிமுக, திமுக மற்றும் அமமுக ஆகிய மூன்று கூட்டணியிலும் தேமுதிகவுக்கு இடமில்லை என்பது உறுதியாகியுள்ளது., அதேபோல் கமல்ஹாசன் கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டதால் தேமுதிக தனித்து விடப்பட்டதாகவே கருதப்படுகிறது.
























