சினிமா செய்திகள்
ஆகஸ்ட் இறுதியில் அஜித்தின் அடுத்த படம் துவக்கம்!

போனிகபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், படக்குழுவினருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துக் கொண்ட தயாரிப்பாளர் போனி கபூர், அடுத்தும் தான் அஜித்தை வைத்து தயாரிக்கப் போகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த படத்தையும் எச். வினோத் இயக்குவார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். ஆனால், படத்தின் நாயகி மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடவில்லை.
ஆகஸ்ட் மாத இறுதியில் அடுத்த படத்திற்கான பூஜை போடப்படும் என்றும் போனி கபூர் கூறியுள்ளதால், அஜித் ரசிகர்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த படமும் ஒரு ரீமேக் படமா அல்லது, எச். வினோத் ஸ்டைல் படமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.







