சினிமா செய்திகள்
மே 1 வலிமை வெளியாகாது? ‘அண்ணாத்த’ உடன் மோத வாய்ப்பு!

அஜித் நடிப்பில் தயாராகி வரும் வலிமை படம் மே 1-ம் தேதி, அவரது பிறந்தநாள் அன்று வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வந்தது.
ஆனால் மே மாதம் தேர்தல் நடைபெறுவது உறுதியானால், கண்டிப்பாக வலிமை படம் மே 1-ம் தேதி வெளியாகாது என்று கூறப்படுகிறது.
வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எனவே மீண்டும் ஹைதராபாத்தில் அதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அது முடிந்த பிறகு வெளிநாட்டில் எடுக்க இருக்கும் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வரும் என்று கூறுகின்றன.
இதே போன்று இந்த வாரம் இறுதியில் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கினாலும், தேர்தல் சமயத்தில் படம் வெளியாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
எனவே தேர்தலுக்குப் பிறகு வலிமை, அண்ணாத்த படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. இதே போன்று ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட, அஜித் நடிப்பில் விஸ்வாசம் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையில் பெறும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.











