சினிமா செய்திகள்
சேப்பாக்கம் மைதானத்தில் ‘வலிமை’ அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்: நாளை பிரதமரிடமும் கேட்பார்களோ?

தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைய உள்ளது என படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். சமீபத்தில் பேட்டியளித்த தயாரிப்பாளர் போனி கபூர் பிப்ரவரி 14ஆம் தேதி உள்ளூர் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் அதன் பின்னர் வெளிநாட்டில் ஒரே ஒரு சேசிங் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டிய இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக அஜித் ரசிகர்கள் இணையதளங்கள் மூலம் ‘வலிமை’ அப்டேட் கேட்டுக் கொண்டு வருகின்றனர் என்பதும், ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் படக்குழுவினர் அப்டேட் தராமல் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ‘வலிமை’ அப்டேட்டை யாரிடம் கேட்க வேண்டும் என்ற விவஸ்தை இல்லாமல் தமிழக முதல்வர் உள்பட பலரிடம் ‘வலிமை’ அப்டேட்டை கேட்டு வரும் அஜித் ரசிகர்கள், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய-இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியின் இடையே வலிமை அப்டேட் கேட்டு குரல் எழுப்பியும் போஸ்டர்களை கையில் தூக்கி வைத்துக் கொண்டும் அஜீத் ரசிகர்கள் இருக்கும் காட்சியை காண முடிகிறது.
இதே ரீதியில் சென்றால் நாளை பிரதமர் தமிழகம் வரும்போது அவரிடமும் ‘வலிமை’ அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கேட்பார்களோ? என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது.
https://twitter.com/Surya75567388/status/1360427576284520450


















