சினிமா
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அட்லீ இயக்கிய பிகில்… சக் தே இந்தியா படமா என்று நெட்டில் விமர்சனம்…

அட்லி-விஜய் கூட்டணியில் தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே சனிக்கிழமை வெளியான இதன் ட்ரெயிலர் வழக்கம்போல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது. இன்றுவரை யூட்டியூப் ரெண்டிங்கிலும் இருக்கிறது.
அட்லி எடுத்த எல்லாப்படத்தையும் ஏதாவது ஒரு படத்தின் தழுவல் என்று பரவலாக விமர்சனம் வருவதும் இயல்பு. ‘ராஜா ராணி’யை ‘மௌன ராகம்’ என்றும் ‘தெறி’யை ‘சத்ரியன்’ படத்துடனும் ‘மெர்சல்’ஐ ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்துடனும் ஒப்பிட்டுக்கூறி கேலி பேசினார்கள். என்றாலும் அந்த மூன்று படமும் பெரிய அளவில் வெற்றியை தேடித்தந்தது.
தற்போது புட் பாலை பின்புலமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பிகில் திரைப்படத்தையும் ஜென்டில் மேன் மற்றும் சக் தே இந்தியா திரைப்படங்களின் தழுவல் என்றும் கூறுகின்றனர் நெட்டிசன்கள். அதற்கு ஏற்றார் போல சாருக்கானும் சக் தே இந்தியா மாதிரியான ஒரு திரைப்படம். அதற்கு என்னுடைய வாழ்த்து என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பகிர்ந்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான கல்பாத்தி அர்ச்சனா “சக்தே இந்தியா திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க வில்லை எனவும், வாங்கியதாக வெளியான செய்திகள் வதந்தி எனவும் பிகில் படத்தின் கிரியேடிவ் பிரடியுசர் அர்ச்சனா கல்பாத்தி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் பிகில் திரைப்படத்தின் சென்சாருக்கு எந்த அரசியல் கட்சியும் நெருக்கடி கொடுக்கவில்லை நாங்கள் சுதந்திரமாக செயல்படுகிறோம்” என்றும் கூறியுள்ளார்.
திரைப்படம் வெளியான பிறகுதான் தெரியும் உண்மை நிலவரம் அதுவரை பொறுப்போம்…