தமிழ்நாடு
சீட் கிடைக்காத எம்.எல்.ஏவுக்கு ராஜ்யசபா பதவி: சமாதானம் செய்த அதிமுக!

அதிமுக வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த வேட்பாளர் பட்டியலில் மூன்று அமைச்சர்கள் மற்றும் 41 எம்எல்ஏக்களுக்கு சீட் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் வரும் தேர்தலில் சீட் கிடைக்காத எம்எல்ஏ ஒருவருக்கு ராஜசபா பதவி தருவதாக அதிமுக தலைமை சமாதானப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த தேர்தலில் மேட்டூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செம்மலை. அவர் இந்த தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை. அவர் போட்டியிட்ட மேட்டூர் தொகுதி பாமக ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதிருப்தியில் இருந்த எம்எல்ஏ செம்மலையை சமாதானப்படுத்திய அதிமுக தலைமை அவருக்கு மாநிலங்களவை பதவி தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனை அடுத்தே செம்மலை சமாதானம் அடைந்ததாகவும் அடுத்து வரும் ராஜ்யசபா தேர்தலில் அவர் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே செம்மலை கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவைக்கு தேர்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சீட் கிடைக்காத மற்ற அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை அதிமுக தலைமை சமாதானப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சாத்தூர் தொகுதி ராஜவர்மன் எம்.எல்.ஏ மட்டும் சீட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்து கட்சியிலிருந்து வெளியேறி அமமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








