சினிமா செய்திகள்
செப்டம்பர் மாதத்தில் ஆதித்யா வர்மா ரிலீஸ்

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்யா வர்மா படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
2017ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் அர்ஜூன் ரெட்டி இந்த படத்தின் ரீமேக்கை துருவ் விக்ரமை கதாநாயகனாக்கொண்டு இயக்குனர் பாலா, வர்மா என்ற பெயரில் இயக்கி வந்தார். படம் சரியாக வரவில்லை என்று தூக்கி போட்டுவிட்டு மீண்டும் ஆதித்யா வர்மா என்ற பெயரில் பாலாவை நீக்கி விட்டு புதிதாக எடுத்தனர்.
துருவ் ஹீரோவாக தொடர கிரீசையாவை வைத்து படத்தை மீண்டும் தயாரித்தனர். தற்போது ஒட்டுமோத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நெருங்கியுள்ளதால், படத்தை செப்டம்பர் மாதம் 27இல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

















