சினிமா செய்திகள்
விக்ரம், துருவ் விக்ரம் மிரட்டும் ‘மஹான்’ டீசர்!
Published
12 months agoon
By
Shiva
விக்ரம் நடித்த ஒவ்வொரு திரைப்படமும் ரிலீஸ் ஆகும்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவரது படங்கள் இதுவரை இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல் முறையாக விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மஹான்’, வரும் பத்தாம் தேதி வெளியாக உள்ளது. அமேசான் ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசரில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமின் மிரட்டலான நடிப்பை பார்க்கும் போது உடனே இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக காந்திமகான் போல் மகானாக வாழ்வேன் என தந்தையிடம் சத்தியம் செய்து கொடுத்த விக்ரம், அதன் பிறகு எப்படி மாறினார்? அவரது மாற்றத்திற்கு என்ன காரணம்? என்பதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெளிவாக விளக்கி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் விக்ரம் ரசிகர்கள் எதிர்பார்த்த கதை, மசாலா மற்றும் ஆக்சன் காட்சிகள் இந்த படத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்களின் வரவேற்பை இந்த படம் பெறும் என்று கூறப்படுகிறது.
You may like
-
என்ன இப்படி பண்ணிட்டானுங்க; கமல்ஹாசன் புத்தாண்டு போஸை வச்சு செய்த ரஜினி ரசிகர்கள்!
-
காந்தாரா முதல் ஆர்ஆர்ஆர் வரை ரூ.400 கோடி வசூலித்த தென் இந்திய படங்கள்!
-
விக்ரம் படத்தையும் விட்டு வைக்காத ரெட் ஜெயண்ட் மூவீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு
-
’விக்ரம்’ வெற்றியை அடுத்து கமலுக்கு குவியும் வாய்ப்புகள்: இதில் சூப்பர்ஹிட் படத்தின் 2ஆம் பாகம்!
-
மை ஹீரோ, மை பிரெண்ட், மை விக்ரம்: குஷ்புவின் அசத்தல் டுவிட்!
-
பாகுபலி 2, கேஜிஎப் 2, ஆர்.ஆர்.ஆர் வசூலை முந்தி முதலிடத்தை பிடித்த விக்ரம்!