Connect with us

சினிமா

‘பெண்களை இப்படி மதிப்பிடாதீர்கள்’: சமீரா ரெட்டி!

Published

on

பெண்களை இப்படி மதிப்பிடாதீர்கள் என நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழில் நடிகர் சூர்யா நடித்த ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. பிறகு, ‘அசல்’, ‘வெடி’ போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்பொழுது திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு பிரேக் விட்டிருப்பவர் சமூக வலைதளங்களில் இன்ஃபுளூயன்சராக முழு நேரமாக இயங்கி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய உடல் குறித்து சமீரா ரெட்டி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

sameera reddy

அவர் பேசியிருப்பதாவது, “நான் திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயாகவும் உள்ளேன். இந்த நிலையில் பெண்களுடைய உடல், நிறம் போன்றவற்றை வைத்து மதிப்பிடுவது அநாகரீகமானது. குழந்தை பெற்ற பிறகு என்னுடைய உருவத்தையோ, நரை முடியையோ, குழந்தை பிறப்பினால் என் உடலில் ஏற்பட்டுள்ள தழும்புகளையும் நான் என்றைக்குமே மறைக்க வேண்டும் என்று நினைத்ததே கிடையாது. பெண்கள் எப்போதும் தங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கு தான் முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்க வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் பின்பற்ற வேண்டும். நம் ஆரோக்கியம் என்பது நம் சார்ந்தது மட்டும் கிடையாது. நம்முடைய குடும்பத்திற்கும் இது அவசியமானது. நாம் சொல்லிக் கொடுக்கும் முறைகளை தான் நம் குழந்தைகளும் பின்பற்றுவார்கள். அதனால் அவர்களுக்கு சிறுவயதிலேயே நொறுக்கு தீனி போன்றவற்றை அறிமுகப்படுத்தாமல் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றினால் அவர்களுடைய எதிர்காலத்துக்கும் நல்லது” என சமீரா பேசியுள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?