தமிழ்நாடு
நீட் தேர்வு வேண்டாம்: மருத்துவரான தமிழ் நடிகை கருத்து!

மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும், பாஜகவினர் மட்டுமே ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்களிடமிருந்து பெரிய அளவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இல்லை என்பதும், நடுநிலையான கல்வியாளர்கள் பெரும்பாலானோர் நீட் தேர்வை ஆதரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட்தேர்வு வருவதற்கு முன்னர் தனியார் மருத்துவ கல்லூரிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக நுழைவுத்தேர்வு வைத்துக் கொண்டிருந்தனர் என்பதும், ஆனால் தற்போது அந்த முறை ஒழிக்கப்பட்டு அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு என நீட் தேர்வு உள்ளது மாணவர்களுக்கு மிகவும் சிறப்பான அம்சம் என்றும் நடுநிலை கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பது தடுக்கப்பட்டதாலும் மட்டுமே அரசியல்வாதிகளும் ஒரு சிலரும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல தமிழ் தெலுங்கு நடிகையான சாய்பல்லவியும் நீட் தேர்வுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இவர் ஒரு மருத்துவ படிப்பு படித்த டாக்டர் என்பது குறிப்பிடதக்கது. நீட் தேர்வு குறித்து அவர் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். நீட்தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் நான் உள்ளேன். மருத்துவ படிப்பு என்பது கடல் போன்றது. அதில் நுழைவுத்தேர்வு நடத்துவதால் மாணவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும். இந்த விவகாரத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறுபவர்களின் பக்கமே நான் இருக்கின்றேன்’ என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.





