சினிமா செய்திகள்
போயஸ் கார்டனில் சொத்து வாங்கிய தனுஷ்!

நடிகர் தனுஷ் தனது மானார் வீட்டு அருகில் போயஸ் கார்டனில் 22 கோடி ரூபாய்க்குச் சொத்து வாங்கியுள்ளார்.
காலா படம் ஏற்படுத்திய நட்டத்தால், நடிகர் தனுஷ் பெரும் நிதி சிக்கலில் மாட்டினார். எனவே அதிலிருந்து வெளியில் வர, கலைபுலி எஸ்.தாணுவுக்கு 3 படமும், சத்திய ஜோதி தியாகராஜனுக்கு 3 படமும் நடித்து தருவதாக தலா 30 கோடி என 60 கோடி சம்பளத்தைப் பெற்றார் தனுஷ்.
இந்த பணம் காலா படத்தினால் ஏற்பட்ட கடனை சரி செய்ய செய்ய தான் என்று பார்த்தால், போயஸ் கார்டனில் 22 கோடி ரூபாய் செலவில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார் தனுஷ்.
இப்படி இரண்டு தயாரிப்பாளர்களிடமும் பணத்தைப் பெற்றது மட்டுமல்லாமல், அவர்கள் படத்தில் நடிக்கச் சரியாகத் தேதிகளை ஒதுக்காமல் இந்தி படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.
அதை முடித்துவிட்டு இவர்களுக்கு ஒப்புக்கொண்ட படங்களில் நடிப்பார் என்று பார்த்தால், அடுத்ததாக மிண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.

















