சினிமா செய்திகள்
மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சோன்ன அமைச்சர்!

மாஸ்டர் படம் எப்போது வெளியாகும் என்று தெரியாத நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்டுள்ளார்.
இன்று சென்னை கலைவானர் அரங்கில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகளுக்குச் சான்றிதழ் வழங்கினார்.
பின்னர் மேடையில் பேசிய அமைச்சர், “மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் தமிழக திரை அரங்குகளில் பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன.
ஆனால் பொங்கலுக்கு முன்பே தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக மாறிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்கள் சமூக விலகலுடன் முகக்கவசம் அணிந்து, அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால் விரைவில் கொரோனா தொற்று ஓடிப்போகும்” என்று தெரிவித்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போன மாஸ்டர் திரைப்படம், இப்போது வரை எப்போது வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளதைப் பார்க்கும் போது மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது போலவே உள்ளது.


















