சினிமா செய்திகள்
ரூ.30 கோடி சம்பளம் கேட்ட சிவகார்த்திகேயன்.. அதிர்ச்சியில் லைகா!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் வெளியாகும் போது 15 கோடி ரூபாய் நிதி பிரச்சனையில் சிக்கியது.
அப்போது சீமராஜா படத்தை ரிலீஸ் செய்ய, திரைப்பட ஃபினான்ஷியர் மதுரை அன்பு 15 கோடி ரூபாய் கொடுத்து உதவினார். அதற்காக மாதம் 45 லட்சம் வட்டி கட்ட வேண்டும் என்ற நிலைக்கு சிவகார்த்திகேயன் தள்ளப்பட்டார்.
பின்னர், 3 மாதங்கள் வரை சிவகார்த்திகேயன் வட்டி தொகையைச் செலுத்தியபோது, ஏற்கனவே நிதி சிக்கலில் உள்ள சிவாவிடம் எப்படி இந்த பணத்தைப் பெறுவது என்று திட்டம் தீட்டிய மதுரை அன்பு, லைகாவுக்கு ஒரு படத்தைச் சிவா நடித்து கொடுப்பது என்று ஒப்பந்தம் போட்டுக்கொடுத்தார். அந்த ஒப்பந்தத்தின் படி லைகா நிறுவனம் 15 கோடி ரூபாயை மதுரை அன்புக்கு வழங்கி விட்டது.
ஆனால் சிவா நீண்ட காலமாக லைகாவுக்கு படம் ஏதும் செய்து தராமல் இருந்த வந்தார். அண்மையில் அட்லீ உதவி இயக்குநர் ஒருவர் சொன்ன கதையை லைகாவுக்கு சிவா செய்து கொடுப்பதாகவும் ஒப்புக்கொண்டார்.
விரைவில் ஷூட்டிங் செல்லலாம் என்று லைகா திட்டமிட்டு வரும் போது, தனக்கு 70 கோடி ரூபாய் மார்க்கெட் உள்ளது, எனவே எனக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
கொரோனா காலத்தில் திரைப்படங்களின் மார்க்கெட் முழுவதும் சரிந்துள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் இந்த சம்பள உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


















