இந்தியா
இந்தியா வந்தடைந்தார் வீரமகன் அபிநந்தன்!

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்பட்டார் அவர் சற்று முன்னர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகா வந்தடைந்தார். அவரை வரவேற்க ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியுள்ளனர்.
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இஸ்லாமாபாத்தில் உள்ள ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து விமானம் மூலம் லாகூர் கொண்டு வரப்பட்டார். அங்கிருந்து இந்திய அதிகாரிகளுடன் சாலை மார்க்கமாக இந்தியா நோக்கி புறப்பட்டார் அபிநந்தன். அப்போதே அவர் வாகா எல்லையை 3 – 4 மணிக்கு வந்தடைவார் என கூறப்பட்டது. இதனையடுத்து வாகா எல்லையில் அபிநந்தனை வரவேற்க பொதுமக்கள் ஏராளமானோர் குவியத்தொடங்கினர்.
இதனால் வாகா எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்நிலையில் சரியாக 4 மணியளவில் அபிநந்தன் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வாகா எல்லைக்கு வந்தடைந்தார். இதனையடுத்து அவருக்கு முதலில் மருத்துவப் பரிசோதனை செய்யப்படும் என பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் சற்று நேரத்தில் அபிநந்தன் இந்திய வீரர்கள் வசம் ஒப்படைக்கப்பட உள்ளார்.




















