தமிழ்நாடு
ஆவின் பால் விலை குறைப்பு.. எந்த பால் பாக்கெட் என்ன விலை.. முழு விவரம்!

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் பால் விலையை 3 ஆக குறைக்கும் அரசாணையில் கையெழுத்திட்டார். தொடர்ந்து பால் விலை உயர்த்தப்பட்டு, குறைக்கப்பட்டுள்ளது என்று சர்ச்சையும் எழுந்து வந்தது. இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முடிவு கட்டும் விதமாக ஆவின் பால் விலை குறைப்பு குறித்த முக்கிய அறிவிப்பை ஆவின் நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
நீல நிறம் ஆவின் பால் பாக்கெட்

ஆவின் நீலம் நிறப் பால் பாக்கெட் toned milk (சமன்படுத்திய பால்) என அழைக்கப்படுகிறது. 500 மில்லி லிட்டர் நீலம் நிற பால் பாக்கெட் விலை 21.50 ரூபாயிலிருந்து 1.50 ரூபாய் குறைத்து 20 ரூபாய் என விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு ஆவின் பால் கார்டு வாங்கினால் 18.50 ரூபாய்க்கு 500 மிலி பால் கிடைக்கும்.
பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்

இதை நிலைப்படுத்திய பால் பாக்கெட் என்றும் கூறுகின்றனர். 500 மில்லி லிட்டர் ஆவின் பச்சை நிற பாக்கெட் விலை 24 ரூபாயில் இருந்து 22 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
மெஜந்தா / பிங்க் ஆவின் பால் பாக்கெட்

இது ஒரு இருநிலை சமன்படுத்திய பால் பாக்கெட். குறைந்த கொழுப்பு இருக்கும். மெஜந்தா / பிங்க் ஆவின் பால் பாக்கெட் 500 மிலி 18.50 ரூபாய்க்கு கிடைக்கும்.
ஆவின் பால் கார்டு சந்த விலை குறைப்பு (500 மிலி)

30 நாட்களுக்கான நீல நிறம் ஆவின் பால் பாக்கெட் சந்தா 555 ரூபாய். பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் மாத கார்டு சந்தா 630 ரூபாய்.பழுப்பு நிற பால் பாக்கெட் சந்தா 690 ரூபாய். மெஜந்தா / பிங்க் ஆவின் பால் பாக்கெட் மாத கார்டு 540 ரூபாய்.
அரசுக்கு கூடுதல் செலவு
ஆவின் பால் விலையை தமிழக அரசு குறைத்துள்ளதால், அரசுக்கு ஆண்டுக்கு 270 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பால் விலை குறைப்பு மே 16-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மேலும் படிக்க: ஆவின் பால் பாக்கெட் வெவ்வேறு நிறத்தில் இருக்கக் காரணம் என்ன? எந்த பாக்கெட் பால் உங்களுக்கு ஏற்றது?







