ஆட்டோமொபைல்
ஹூண்டாய் நிறுவனம் அதிரடி முடிவு.. சென்னை ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் உற்பத்தி அதிகரிப்பு!

உலகின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
கொரோனா மற்றும் உக்ரெய்ன் எதிரான போர் உள்ளிட்ட காரணங்களாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான சிப்கள் வரத்து இல்லாமல், உற்பத்தியைக் குறைவாகவே செய்து வந்தனர்.

இப்போது செமிகண்டக்டர் சிப் வரவு அதிகரித்துள்ளதால் ஹூண்டாய் நிறுவனம் மீண்டும் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
சென்னை ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் ஆண்டுக்கு 7 லட்சத்து 60 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்து வந்த ஹூண்டாய் இந்த ஆண்டு 8 லட்சத்து 20 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

முக்கியமாக ஹூண்டாய் க்ரீடா மற்றும் வென்யூ எஸ்யூவி கார்களை அதிகளவில் உற்பத்தி செய்ய ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது.






















