சினிமா செய்திகள்
ஷாருக்கான் – அட்லி படம் டிராப்பா? பாலிவுட்டில் பரபரப்பு

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நயன்தாரா நடிப்பில் உருவான லயன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென இந்த படம் டிராப் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மட்டுமே நடந்தது என்றும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் ஷாருக்கானுக்கு ஏற்பட்ட பல்வேறு பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு தொடங்கவில்லை என்றும் கூறப்பட்டது .
இந்த நிலையில் தற்போது முதல்கட்ட படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்து ஷாருக்கான் தனக்கு இந்த காட்சிகள் திருப்தி இல்லை என்று அட்லீயிடம் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இந்த படம் டிராப் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படம் டிராப் என்று கூறப்பட்ட நிலையில் தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று கூறிக் கொண்டிருக்கும் சிலர் மட்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் கூறினார்கள்.
ஆனால் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளதால் மீண்டும் தொடங்குமா? அல்லது டிராப் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




















