இந்தியா
சார்ஜ் போட்டபடி லேப்டாப்பில் பணி செய்த ஐடி இளம்பெண்: நடந்த விபரீதம்!

சார்ஜ் போட்டபடி லேப்டாப்பில் பணி செய்த இளம் பெண் ஐடி ஊழியர் ஒருவருக்கு ஏற்பட்ட விபரீதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் வீட்டில் இருந்தே பணி செய்து கொண்டிருந்தார். அவர் தன்னுடைய லேப்டாப்பில் மிகக்குறைவாக சார்ஜ் இருந்த நிலையில் லேப்டாப்பில் சார்ஜ் போட்டு கொண்டே வேலை செய்து கொண்டிருந்தார்
அப்போது திடீரென ஹைவோல்ட் மின்சாரம் பாய்ந்ததை அடுத்து லேப்டாப் வெடித்து சிதறியதால் அவர் படுகாயமடைந்துள்ளார் என்றும் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
மருத்துவ வட்டார்த்தின் தகவலின்படி அந்த இளம்பெண் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து சார்ஜ் போட்டபடி லேப்டாப்பை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.














