Connect with us

தமிழ்நாடு

சென்னையில் சார்ஜ் போடும்போது வெடித்த இ-பைக்: 17 பைக்குகள் எரிந்து நாசம்

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக இ-பைக்குகள் வெடித்து சிதறிய தீப்பிடித்து வரும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள் எரிந்து நாசமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூர் அருகே இ-பைக் ஷோரூம் ஒன்றில் அதனை ஊழியருக்கு ஒரு இ-பைக்குக்கு சார்ஜ் போட்டுக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அந்த பைக் வெடித்து சிதறியது. இதனை அடுத்து அந்த பைக் தீப்பற்றி எரிந்தது மட்டுமின்றி அருகில் 17 இ-பைக்குகளிலும் தீ பற்றியது. இதனால் 17 இ-பைக்குகள் தீப்பற்றி எரிந்து நாசமானது.

இது குறித்து தகவல் கிடைத்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த போதிலும் 17 இ-பைக்குகள் முழுமையாக தீயில் தீக்கிரையாகி விட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக இ-பைக்குகள் வெடித்துச் சிதறி தீப்பிடித்தது வரும் நிலையில் இன்று சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள் தீப்பிடித்த சம்பவம் இ-பைக்குகள் பயன்படுத்துபவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக இ-பைக்குகள் பயன்படுத்தலாம் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இ-பைக்குகள் திடீர் திடீரென தீ விபத்துக்கு உள்ளாகி வருவது அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஆக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Your first backlinks will appear within minutes — and your website gets cited on other sites at the same time..