சினிமா செய்திகள்
கமல்ஹாசன் – சிவகார்த்திகேயன் படத்தின் நாயகிகள் த்ரிஷா-சமந்தா?

உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.
‘எஸ்கே 20’ திரைப்படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் பிசியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் கவுரவ வேடத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்தின் நாயகிகளாக திரிஷா மற்றும் சமந்தா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கமல்ஹாசனுக்கு திரிஷாவும் சிவகார்த்திகேயனுக்கு சமந்தாவும் ஜோடியாக நடிக்க உள்ளார்கள் என்றும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


















