Connect with us

இந்தியா

ஹிஜாப் விவகாரம்…மாணவர்கள் முன்பு கோஷம் எழுப்பிய மாணவிக்கு பரிசு அறிவிப்பு….

Published

on

video

கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் முஸ்லீம் மதத்தை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர சமீபத்தில் தடை விதிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும், நீதிமன்றத்திலும் கல்லூரியின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஒருபக்கம், கர்நாடகாவை சேர்ந்த பாஜகவினர் இதை கையில் எடுத்து அரசியல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கல்லூரி மாணவர்களை தூண்டிவிட்டு ஹிஜாப் கல்லூரிகளில் ஆர்ப்பாட்டம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த ஒரு கல்லூரி பெண்ணின் அருகில் சென்று பலர் ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கினர். ஆனாலும் அந்த மாணவி அஞ்சவில்லை. மேலும், அவர்களை எதிர்க்கும் விதமாக ‘அல்லாஹு அக்பர்’ என முழங்கினார். தனக்கு எதிராக அத்தனை பேர் இருந்தும் அவர் அஞ்சவில்லை. சிங்கப்பெண்ணாக எதிர்ப்பை தெரிவித்து நெட்டிசன்களின் பாராட்டை பெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இந்நிலையில், அப்பெண்ணுக்கு ரூ.5 லட்சம் சிறப்பு பரிசு கொடுக்கப்போவதாக கர்நாடகவில் உள்ள ஒரு முஸ்லீம் இயக்கம் அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் மாணவிகள் போராட்டம் நடத்தியதால் அதற்கு போட்டி போராட்டமாக இந்து மாணவர்கள் காவி உடை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஹிஜாப் அணிவதை அனுமதிக்க வேண்டும் என மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Covering breaking news, local stories, business, health, public affairs, and national developments, kearney news aims to keep readers informed with clear, factual, and engaging reporting.