சினிமா செய்திகள்
ஆஸ்கார் விருதை பெறும் வாய்ப்பை இழந்தது ஜெய்பீம்

சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் பட்டியலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த பட்டியலில் ஜெய்பீம்திரைப்படம் இடம்பெறவில்லை என்ற தகவல் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.
ஆஸ்கார் விருது பட்டியலில் இடம்பெறும் படங்கள் குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியான நிலையில் இந்த அறிவிப்பில் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் இடம்பெறவில்லை என்ற தகவல் தெரியவந்து உள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
சூர்யாவின் சமீபத்தில் நொயிடாவில் நடந்த சர்வதேச அளவில் விருதை பெற்ற ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கார் விருதையும் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஸ்கார் விருது வழங்கும் பட்டியலுக்கு அந்த படம் செல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை ஜெய்பீம் திரைப்படம் பெரும் என்றும் சூர்யா ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.




















