சினிமா செய்திகள்
விஜய்-புதுவை முதல்வர் சந்திப்பின் மாஸ் புகைப்படங்கள் வைரல்!

தளபதி விஜய் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திடீரென நேற்று இரவு அவரது வீட்டில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் சந்தித்தது தமிழகம் மற்றும் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும் இந்த சந்திப்பு குறித்து இருவரும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்பதும் இது ஒரு மரியாதை நிமிர்த்த சந்திப்பு என்றுய் மட்டுமே தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் தனது அரசியல் பயணத்தை புதுவையிலிருந்து தொடங்கப் போவதாகவும் விரைவில் முதலில் போட்டியிட்டு அதன் பிறகு தமிழகத்தில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் விஜய் மற்றும் புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகியோர்களின் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. இந்த சந்திப்பின்போது விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் மிக வேகமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


















