சினிமா செய்திகள்
கண்டெண்ட் கொடுத்த சுரேஷ் எவிக்சனா? பிக்பாஸ் அல்டிமேட் ரசிகர்கள் அதிர்ச்சி!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் முதல் எவிக்ஷன் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஊடகங்களில் வெளியான செய்திகளில் இருந்து இந்த வாரம் அபினய் எலிமினேஷன் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அனைவரும் எதிர்பாராத வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதல் கண்டெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேஷன் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேஷன் செய்யப்பட்டு இருந்தால் கண்டிப்பாக அது கண்டிக்க வேண்டியது என்றும் இந்த நிகழ்ச்சியை அவர்தான் கலகலப்பாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் என்றும் ஹாட்ஸ்டார் ஓடிடி செய்தது நியாயமே இல்லை என்றும் ஒரு ஓட்டு கூட வாங்காத அபினய்யை காப்பாற்றிவிட்டு சுரேஷை எலிமினேஷன் செய்வது என்பது இந்த நிகழ்ச்சியை போலி நிகழ்ச்சி என்று கூறும் வகையில் செய்யப்பட்டது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் இன்று தான் உண்மையாகவே எலிமினேஷன் செய்யப்பட்டது சுரேஷ் சக்கரவர்த்தியா? அல்லது வேறு ஒருவரா என்பது அதிகாரப்பூர்வமாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.















