தமிழ்நாடு
தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் விடுமுறையில் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
ஜனவரி 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் பொங்கல் விடுமுறை நாட்கள் என்பதும், ஜனவரி 18ஆம் தேதி தைப்பூசத் திருநாள் என்பதால் அன்றைய தினம் அரசு விடுமுறை என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் இடைப்பட்ட 17ஆம் தேதி மட்டும் வேலை நாளாக இருப்பதால் பொங்கல் விடுமுறைக்கு சென்றவர்கள் கூடுதலாக ஒரு நாள் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
மேலும் ஜனவரி 16ஆம் தேதி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அன்றைய தினம் வெளியூர் சென்றவர்கள் அலுவலகங்களுக்கு திரும்ப முடியாது என்ற காரணத்தினால் 17ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பொங்கல் விடுமுறையாக ஜனவரி 14 முதல் 18 வரை தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.









