இந்தியா
தமிழகத்தின் பக்கத்து மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு: தமிழகத்தில் எப்போது?

தமிழகத்தின் பக்கத்து மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்திலும் விரைவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதும் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 500ஐ நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஏற்கனவே ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையிலும் ஒமிக்ரான் வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்ட கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 29 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் அம்மாநிலத்தில் 40 பேர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் அதாவது டிசம்பர் 28 முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கர்நாடக மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

















