இந்தியா
இந்திய வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த தயார்: விஜய் மல்லையா அதிரடி டுவீட்!

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவராக விளங்கிய விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார்.
இன்றுவரை இவர் மீது இந்த வங்கிக்கடன் மோசடி தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ள இவரை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவந்து கைது செய்து விசாரணை நடத்த பல முயற்சிகள் நடந்தும் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் விஜய் மல்லையா தான் வாங்கிய வங்கி கடனை திரும்ப செலுத்த தயார் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில், இந்தியாவின் மிகப்பெரிய சாராய ஆலை, விமான நிறுவனங்களை நான் நடத்தினேன். மிக அதிகமான கச்சா எண்ணெய் விலை காரணமாக விமான நிறுவனம் நஷ்டமடைந்து. அப்படியிருந்தும் நான் வாங்கிய அசல் தொகையை கட்ட சம்மதித்தேன். ஆனால் அரசாங்கமும், வங்கிகளும் தான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.








