இந்தியா
வோடோபோன் திவால் ஆனால் அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம்: வல்லுனர்கள் எச்சரிக்கை!

வோடபோன் திவாலானால் அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் நிறுவனம் 1.8 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் எனவே வோடபோன் நிறுவனத்தின் தனக்குள்ள 27 சதவீத பங்குகளை அரசிடமோ அல்லது வேறு நிதி நிறுவனங்களிடமோ தர தயார் என்று பிர்லா அறிவித்துள்ளார். ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த குமாரமங்கலம் பிர்லா தன்னுடைய பங்குகளை விற்க தயார் என அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் வோடபோன் நிறுவனம் ஒருவேளை திவாலானால் அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். வோடபோன் நிறுவனம் இந்திய வங்கிகளில் 23 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும் இந்தக் கடன்களில் பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகளில் இருந்து பெற்ற கடன் என்றும் அதனால் அந்த நிறுவனம் திவால் ஆனால் இந்த கடன்களை வசூலிக்க முடியாது என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை எச்சரிக்கை செய்துள்ளனர்
அதேபோல் அலைக்கற்றை கட்டணமாக ஊடக நிறுவனம் தொலைத்தொடர்புத்துறை 96 ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலுத்த வேண்டியது உள்ளது என்றும் இந்த பணமும் வோடோபோன் நிறுவனம் திவால் ஆனால் கிடைப்பது கஷ்டம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால் வோடோபோன் நிறுவனத்தை அரசு நிதி உதவி செய்து காப்பாற்ற வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது
கடந்த 2018-ஆம் ஆண்டில் 40 கோடியாக இருந்த வோடபோன் வாடிக்கையாளர்கள் தற்போது 26 கோடியாக குறைந்து விட்டதாகவும் கிட்டத்தட்ட பாதி அளவு வாடிக்கையாளர்கள் குறைந்து விட்டதால் வோடபோன் நிறுவனம் மிகப் பெரிய நஷ்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்தியாவில் ஜியோ போன் அறிமுகமானதிலிருந்து அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் திண்டாட்டத்தில் உள்ளது என்றும் ஏற்கனவே ஏர்செல் நிறுவனம் இழுத்து மூடப்பட்ட நிலையில் வோடபோன் நிறுவனம் தற்போது தத்தளித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது


















