தமிழ்நாடு
புதிய உச்சத்திற்கு சென்றது பெட்ரோல், டீசல் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்

கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் 30 காசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த நிலையில் இன்றும் அதே போல் உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இன்று 30 காசுகள் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதை அடுத்து பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.102.70 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.98.59 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து டீசல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 103 ரூபாயை நெருங்கி உள்ளது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே செல்வதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக பட்ஜெட்டில் டீசலுக்கான பெட்ரோலுக்கான வரியை தமிழக அரசு குறைத்தது. இதனால் 100 ரூபாய்க்குள் பெட்ரோல் விலை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் டீசல் விலை உயர்த்தி வருவதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உச்சத்திற்கு சென்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் மற்றும் டீசலை மீண்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















