தமிழ்நாடு
திமுகவுடன் கூட்டணியில் பிரச்சனையா? திருமாவளவன் விளக்கம்!

சென்னை: திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறவு எப்போதும் போலத்தான் இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறுமா என்று கடந்த சில நாட்களாக விவாதம் செய்யப்பட்டு வருகிறது. இவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்றும் கூட விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு நடத்தி உள்ளார்.
இதை தொடர்ந்து ஸ்டாலினை சந்தித்த பின் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். சந்திப்பிற்கான காரணத்தையும் அவர் பேட்டியில் குறிப்பிட்டார்.
அதில், திமுக – விசிக உறவில் எந்த பிரச்சனையும் இல்லை. திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். திமுகவுடன் உறவு வலிமையாக உள்ளது.
கஜா புயல் சேதம், நிவாரண நிதி, லோக் சபா தேர்தல், தமிழக சட்டமன்ற இடைதேர்தல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதம் செய்தோம். எங்கள் உறவு எப்போதும் போலத்தான் இருக்கிறது. சிலர் வதந்திகளை பரப்பி சந்தோசம் அடைய பார்க்கிறார்கள், என்றுள்ளார்.























