சினிமா
இது வடிவேல் படமாச்சே!.. சிவகார்த்திகேயனை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்….

கடந்த 4 வருடங்களாக சினிமாவில் வடிவேலு நடிக்கவில்லை. தற்போது அவர் மீது விதிக்கப்பட்ட ரெட்கார்டு நீக்கப்பட்டு மீண்டும் நடிக்கவந்துள்ளார். பத்து வருடங்களுக்கு பின்னர் நடிகர் வடிவேலு மீண்டும் திரையுலகில் ரீ எண்ட்ரி ஆகியுள்ள நிலையில் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் அவர் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘நாய்சேகர்’ என்கிற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என கருதியதால் அந்த டைட்டில் வைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர்.

ஆனால் இந்த தலைப்பு ஏற்கனவே சதீஷ் நடித்து வரும் திரைப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த டைட்டிலை தர முடியாது என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் கூறியதாகவும் செய்திகள் வெளியானது. இது குறித்து வடிவேலு தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏஜிஎஸ் நிறுவனம் டைட்டிலை கொடுக்கவில்லை என்று செய்திகள் வெளியானது. இதையடுத்து வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கு ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற டைட்டில் வைக்க இருப்பதாக கூறப்பட்டது.

இநிந்லையில், சதீஷ் நடிக்கும் ‘நாய்சேகர்’ என்ற திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எனவே, இந்த தலைப்பு சதீஷ் படத்திற்குதான் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
ஆனால், இதைக்கண்ட நெட்டிசன்கள் பலரும் இந்த தலைப்பு வடிவேலுக்குதான் பொருத்தமாக இருக்கும். சதீஷ்லாம் ஒரு நடிகரா? என அவரின் டிவிட்டர் பக்கத்தில் கண்படி திட்டி வருகின்றனர். சில சதீஷை ஒருமையிலும் விமர்சித்து வருகின்றனர்.
சதிஷ் எல்லாம் காமெடியன் னு இன்னுமா அண்ணா நம்புறீங்க
— Arun ᵀʰᵘⁿⁱᵛᵘ (@Arunnak_) September 16, 2021


















