தமிழ்நாடு
ஒரே நாளில் ரூ.216 உயர்ந்தது தங்கம் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூபாய் 216 உயர்ந்துள்ளதை அடுத்து தங்க நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 27ம், சவரன் ஒன்றுக்கு ரூபாய் 216ம் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4458.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 27 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4485.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 35664.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 216 உயர்ந்து ரூபாய் 35880.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4849.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38792.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 27ம், ஒரு சவரன் ரூபாய் 216ம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ.67.20 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு ஐம்பது காசுகள் உயர்ந்து ரூபாய் 67.70 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 67700.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.















