தமிழ்நாடு
மீராமிதுன் ஜாமின் மனு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீராமிதுன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை மீரா மிதுன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பட்டியல் இனத்தவர் குறித்து கடுமையாக பேசியிருந்தார். பட்டியல் இனத்தவர் குறித்து நடிகை மீராமிதுன் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து விசிக கட்சியின் நிர்வாகிகள் இது குறித்து புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் திடீரென மீராமிதுன் தலைமறைவானதை அடுத்து அவரது செல்போன் சிக்னலை வைத்து அவர் கேரளாவில் இருப்பதை கண்டுபிடித்து கேரளா சென்று தமிழக போலீசாரின் தனிப்படை கைது செய்தது.
இதனையடுத்து சென்னை வரவழைக்கப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவரை வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார் .
இந்த நிலையில் மீராமிதுன் மற்றும் அவரது ஆண்நண்பர் ஆகிய இருவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகிய இருவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.








