பிற விளையாட்டுகள்
தடுமாறி கீழே விழுந்தபோதிலும் தங்கம் வென்ற வீராங்கனை!

ஒலிம்பிக் போட்டியில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தடுமாறி கீழே விழுந்த போதிலும் சுதாரித்து எழுந்து தன்னம்பிக்கையுடன் ஓடி தங்கம் வென்ற வீராங்கனைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. தினமும் பல்வேறு வகை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று 1500 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டி ஒன்று நடந்தது.
இந்த போட்டியில் வீராங்கனைகள் தங்களுடைய பாதையில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் நெதர்லாந்து வீராங்கனை சிஃபான் ஹஸன் என்பவர் திடீரென சக வீராங்கனையுடன் மோதிக் கீழே விழுந்தார்.
இதனை அடுத்து அவர் நான்காவதாக வந்து கொண்டிருந்த நிலையில் கீழே விழுந்ததால் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார். இருப்பினும் அவர் மனம் தளராமல் ஓடி, ஒவ்வொரு வீராங்கனையாக முன்னேறி கடைசியில் முதல் இடத்திற்கு வந்து தங்கப்பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
களத்தில் தடுமாறினாலும் இலக்கில் தடுமாறாமல் தங்கம் வென்ற வீராங்கனை சிஃபான் ஹசனுக்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.






















