இந்தியா
மும்பையில் கனமழை காரணமாக மண்சரிவு; 20 பேர் பலி!

மும்பை மாநகரில் கடந்த சில நாட்களாக மிகக் கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள செம்பூர் மற்றும் விக்ரோலி பகுதிகளில் கடும் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக இதுவரை 20 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வந்துள்ளது.
இன்று காலை முதல் மீண்டும் மும்பையின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்து வரும் சில நாட்களுக்கும் மிகக் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதன் காரணமாக மும்பைக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் பொது மக்கள் அனைவரும் வீட்டுக்கு உள்ளேயே இருக்கும் படி வலியுறுத்தப்பட்டு உள்ளது.
#WATCH | Maharashtra: Rainwater entered Mumbai’s Borivali east area following a heavy downpour this morning pic.twitter.com/7295IL0K5K
— ANI (@ANI) July 18, 2021
மும்பையின் மழை காரணமாக உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை தரப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் தரப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.
மேலும் மகாராஷ்டிர மாநில அரசு சார்பில் முதல்வர் உத்தவ் தாக்கரே, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் கொடுக்கப்படும் எனத் தெரிவித்து உள்ளார்.







