சினிமா செய்திகள்
இந்த அவமானம் விஜய்க்கு தேவையா?… ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்…

நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றை வாங்கினார். இறக்குமதி செய்த அந்த காருக்கு நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என்று விஜய் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில ஆண்டுகளாக நடந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில் நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அது மட்டுமின்றி அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், ‘நடிகர்கள் சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்றும், சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்யக்கூடாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

3) விஜய்
மேலும் நன்கொடை கொடுப்பது போன்று வரி செலுத்துவதை எண்ணக்கூடாது என்றும் வரி செலுத்த வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கட்டாய பங்களிப்பு என்றும் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து டிவிட்டரில் அஜித் ரசிகர்கள் #வரிகட்டுங்க_விஜய் என்கிற ஹேஷ்டேக் மூலம் அவரை கிண்டலடிக்க துவங்க அந்த ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆனது. இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் #கடனைஅடைங்க_அஜித் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி அஜித்தை திட்ட 2 ஹேஷ்டேக்குகளும் டிரெண்டிங்கில் மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது.
அதேநேரம், பல கோடி கொடுத்து சொகுசு கார் வாங்கிய விஜய், இந்திய அரசுக்கு கட்ட வேண்டிய வரியை கட்டியிருக்கலாம். பிற்காலத்தில் அரசியலுக்கு வர விரும்பும் அவர் இது கரும்புள்ளியாக அமைந்துவிட்டது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






















