சினிமா
அசிங்கப்படுத்தினார்!…பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறேன்… வனிதா பரபரப்பு புகார்…

கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைகளில் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் வனிதா விஜயகுமார். பீட்டர் என்பவரை 3வது திருமணம் செய்ததும், அதன்பின்னர் நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக மாறியது. அதன்பின் அதிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் விஜய் டிவியில் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்நிலையில், விஜய் டிவியில் பணிபுரியும் ஒருவர் மீது அவர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

எனக்கும் விஜய்க் டிவிக்கு நல்ல உறவு உண்டு. அது எப்போதும் தொடரும். ஆனால், தற்போது அங்கு பணி செய்யும் இடத்தில் ஒரு சீனியர் பெண்மணி தன்னுடைய வளர்ச்சியை பொறுக்காமல் என்னை துன்புறுத்துகிறார், என்னை அசிங்கமாக நடத்துகிறார். இதை ஏற்க முடியாது. எனவே, ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறேன்.
ஒரு பெண்ணை அதுவும் 3 பெண் குழந்தைகளின் தாயை இந்த சமூகம் இப்படித்தான் நடத்துகிறது. அவளை அவமானப்படுத்தி வளரவிடாமல் தடுக்கிறது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். சுரேஷ் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். என்னால்தான் நீங்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற நேரிட்டது என பதிவிட்டுள்ளார்.
அதேநேரம், யார் தன்னை மோசமாக நடத்தியது என்பது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
View this post on Instagram
















