சினிமா செய்திகள்
சிஎஸ்கே வீரருக்கும் உதவி செய்த நடிகர் சோனுசூட்! 10 நிமிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆக்சிஜன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவரின் உறவினர் ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில் நடிகர் சோனுசூட் உதவி செய்து பத்து நிமிடத்தில் அவருக்கு ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா என்பது தெரிந்ததே. அவருடைய 65 வயது அத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால் அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லை. இதனை அடுத்து சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டரில் தனது 65 வயது அத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவை என்றும் எனவே தயவு செய்து உதவி செய்யுங்கள் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
Oxygen cylinder reaching in 10 mins bhai. ☑️@Karan_Gilhotra @SoodFoundation https://t.co/BQHCYZJYkV
— sonu sood (@SonuSood) May 6, 2021
இந்த கோரிக்கையை பார்த்த நடிகர் சோனு சூட் உடனடியாக அவருடைய அத்தைக்கு பத்து நிமிடத்தில் ஆக்சிஜன் ஏற்பாடு செய்துவிட்டு பின்னர் டுவிட்டர் பக்கத்தில் இன்னும் 10 நிமிடத்தில் உங்கள் அத்தைக்கு ஆக்ஸிஜன் கிடைத்துவிடும் என்று பதில் அனுப்பி இருந்தார். இதனையடுத்து சுரேஷ் ரெய்னா நடிகர் சோனுசூட் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இது குறித்த தகவல் டுவிட்டரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

















