தமிழ்நாடு
காலையில் நெகட்டிவ், மாலையில் பாசிட்டிவ்: நெல்லை இளைஞரின் குழப்பத்தை தீர்த்த மாவட்ட நிர்வாகம்!

நெல்லையை சேர்ந்த இளைஞர் சுப்பையா என்பவர் தனக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததையடுத்து அவர் தனியார் லேப் ஒன்றில் பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா நெகட்டிவ் இருந்து ரிசல்ட் வந்தது.
இதனை அடுத்து பரிசோதனை முடிவில் சந்தேகமடைந்த அவர் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்தார். அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. இதனால் அந்த இளைஞர் குழப்பம் அடைந்தார்.
இதனை அடுத்து அவர் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தனக்கு காலையில் எடுத்த பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என்றும் மாலையில் எடுத்த கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்திருப்பதை கூறினார்.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட பரிசோதனை மட்டுமே உறுதி செய்யப்படும் என்றும் அதனால் உடனடியாக நீங்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் மருத்துவரை அணுகுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
காலையில் நெகட்டிவ் மாலையில் பாசிட்டிவ் என அடுத்தடுத்து மாறி மாறி ரிசல்ட் வந்தால் குழப்பமடைந்த அந்த இளைஞர் அதன் பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி தற்போது தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

















