சினிமா செய்திகள்
’மாஸ்டர்’ படத்தின் புதிய சாதனை: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ஏற்கனவே பல்வேறு சாதனைகளை செய்துள்ள நிலையில் தற்போது புதிய சாதனை செய்துள்ள தகவல் வந்துள்ளது.
சமூகவலைதளங்களில் முன்னணியில் இருக்கும் டிக்டாக்கில் ’மாஸ்டர்’ படத்தின் பாடல்கள் மிக அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 1,500 மில்லியன் ’மாஸ்டர்’ பட பாடல்களின் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதில் டிக்டாக் பிரபலங்கள் மட்டுமின்றி திரை உலக பிரபலங்களும் ’மாஸ்டர்’ பாடல் வீடியோக்களை பதிவு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மாஸ்டர் திரைப்படகுழுவினர் இதுகுறித்த வீடியோ தயாரித்துள்ள நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் ’மாஸ்டர்’ படத்தின் பாடல்களை பயன்படுத்திய டிக்டாக் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ரோபோ சங்கர் தன்னுடைய மகளுடன் ’மாஸ்டர்’ படத்தின் பாடலுக்கு பாடி ஆடிய நடனம் மற்றும் சாண்டி மாஸ்டர், வேதிகா, நந்திதா உள்பட பல திரையுலக பிரபலங்கள் ஆடிய நடனத்தின் காட்சிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
’மாஸ்டர்’ படத்தின் பாடல்கள் 1,500 மில்லியன் வீடியோக்களாக டிக்டாக்கில் பதிவு செய்திருப்பது டிக்டாக்கை பொறுத்தவரை மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







