சினிமா
விக்ராந்துக்காக வசனகர்த்தாவாக மாறும் விஜய்சேதுபதி!

விக்ராந்த் நடிக்கும் புதிய படத்திற்கான வசனங்களை நடிகர் விஜய்சேதுபதி எழுத உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் சஞ்சீவ் இயக்கும் புதுப்படத்தில் நடிகர் விக்ராந்த் நடிக்கவுள்ளார். நடிகர் விஜய்சேதுபதி இப்படத்திற்கு டயலாக்குகளை எழுதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ராந்த் மற்றும் விஜய்சேதுபதி இருவரும் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான கவண் படத்தில் நடித்திருந்தனர்.
அப்போது முதலே இருவருக்கும் நல்ல நட்பு உருவாகி இருந்தது. அறிமுக இயக்குநர் சஞ்சீவும் விஜய்சேதுபதியின் நண்பர் என்பதால், இப்படத்திற்கு டயலாக்குகளை எழுத படுபிசியாக உள்ள விஜய்சேதுபதி ஒத்துக் கொண்டுள்ளார்.
விஜய்சேதுபதி முன்னதாக தயாரித்து நடித்த ஆரஞ்சு மிட்டாய் படத்திற்கு வசனங்கள் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.



















