சினிமா செய்திகள்
கமல்ஹாசன் படத்தில் வில்லனாக நடிக்கின்றாரா ராகவா லாரன்ஸ்?

கமலஹாசன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்கள் என்ற நிலையில் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ’விக்ரம்’ என்ற படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்த பேச்சுவார்த்தையை ராகவா லாரன்ஸ் இடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடத்தி வருவதாகவும் விரைவில் இந்த தகவல் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸ் ஏற்கனவே இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இருந்தும் தனது பிசியான ஷெட்யூலில் கமல்ஹாசன் படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ’விக்ரம்’ திரைப்படத்தில் வில்லன் கேரக்டர் மிகவும் வலுவானது என்றும் அந்த கேரக்டரில் ஒரு மாஸ் நடிகர் வில்லனாக நடித்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்று முடிவு செய்ததால் ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் மாஸ் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




















