தமிழ்நாடு
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது இந்த 20 தொகுதிகளா?

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 சட்டப் பேரவைத் தொகுதிகளும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இது குறித்த ஒப்பந்தத்தில் இரு தரப்பு தலைவர்களும் நேற்று நள்ளிரவு கையெழுத்திட்டனர்.
இந்த நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அந்தத் தகுதிகள் பின்வருமாறு: மயிலாப்பூர், காரைக்குடி, சேப்பாக்கம், வேளச்சேரி, காஞ்சிபுரம், திருத்தணி, பழனி, சிதம்பரம், கிணத்துக்கடவு, கோவை தெற்கு, ராசிபுரம், ஆத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ஓசூர், தூத்துக்குடி, நெல்லை, ராஜபாளையம் மற்றும் சென்னை துறைமுகம்
இந்த 20 தொகுதிகள் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது


















