சினிமா செய்திகள்
#GoBackModi: ஓவியாவின் வைரல் டுவீட்

பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் தமிழக அரசியல் கட்சிகள் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பதிவு செய்து தமிழக அளவிலும், இந்திய அளவிலும், ஏன் உலக அளவிலும் டிரெண்ட் ஆகி வருவது வழக்கமாக ஒன்றாக இருக்கிறது.
அந்த வகையில் நாளை பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வரவிருக்கும் நிலையில் இன்று டுவிட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென நடிகையும் பிக்பாஸ் பிரபலமும் ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்துள்ளார்.
இதனை பார்த்து அவரது ஃபாலோயர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ’இதுக்குத்தான் செல்லம் உன்னை அவ்வளவு பிடிக்கும் என்றும், தலைவியே #GoBackModi போட்டாச்சா என்றும், தங்கம் ஐ லவ் யூ என்றும், முரட்டு சம்பவம் என்றும், ஓவியாவே #GoBackModi போட்டாச்சு இனி மோடி திரும்பி போய்ருவாரு’ என்றும் ஒரு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.
ஓவியா இதுவரை அரசியல் குறித்த எந்த டுவிட்டையும் பதிவு செய்யாத நிலையில் அவரே #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்திருப்பது ஒருவித சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது என சில நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
— Oviyaa (@OviyaaSweetz) February 13, 2021

















