தமிழ்நாடு
கிணற்றில் விழுந்த யானை உயிருடன் மீட்பு!

பாலக்கோடு அருகே கிணற்றில் விழுந்த யானை 13 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில், இன்று அதிகாலை 5 மணியளவில் கிணறு ஒன்றில் விழுந்தது. கிணற்றில் விழுந்த யானை பிழரியதை அடுத்து சென்று பார்த்த மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
இதை மீட்க கடந்த 13 மணி நேரமாக வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் போராடி வந்தனர்.
முதலில் யானை இருந்த கிணற்றில் இறங்கிய தீயணைப்புத் துறையினர், யானையைக் கயிறு, பெல்ட் போன்றவற்றால் கட்டி ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தித் தூக்கினர். ஆனால் அது தோல்வியடைந்தது.
பின்னர் மீண்டும் அந்த முயற்சியில் ஈடுபட்ட மீட்பு படையினர், சுமார் 8:20 மணியளவில் யானையைக் கிணற்றிலிருந்து மீட்டனர்.
கிணற்றிலிருந்து வெளியில் யானையைக் கொண்டு வந்த உடன் அது மகிழ்ச்சி, பயத்தில் துள்ளிக்கொடுத்து ஓடியது. அருகிலிருந்தவர்கள் பதரியடித்து ஓடினர். தற்போது யானை அறை மயக்கத்தில் உள்ளதால் தண்ணீர் பீச்சி அடித்து வருகின்றனர்.
இதை அடுத்து யானையை காட்டுப்பகுதியில் கொண்டு சென்று விடவும், யானைக்குச் சிகிச்சை அளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.




















