தமிழ்நாடு
தமிழ்நாடு – ஆந்திரா இடையில் பேருந்து சேவைக்கு அனுமதி!

தமிழ்நாடு. ஆந்திர பிரதேசம் இடையில் நவம்பர் 25-ம் தேதி முதல் அரசு, தனியார் பேருந்து சேவையைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கோவிட்-19 தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டது. பின்னர் வந்த ஊரடங்கு தளர்வுகளில் மாவட்டம் அளவிலான பேருந்து சேவை, மாநிலம் அளவிலான பேருந்து சேவைகள் என படிபடியாக தொடங்கப்பட்டன.
ஆனால் மாநிலங்கள் இடையிலான பேருந்து சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நவம்பர் 15-ம் தேதி முதல் தமிழ்நாடு – கர்நாடகா இடையிலான பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தொடர்ந்து ஆந்திரா முதல்வரும் இருமாநிலங்கள் இடையிலான பேருந்து சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார்.
ஆந்திர முதல்வரின் கோரிக்கையை ஏற்றுள்ள தமிழக அரசு நவம்பர் 25-ம் தேதி முதல், தமிழ்நாடு – ஆந்திரா இடையில் தனியார் மற்றும் அரசு பேருந்து சேவைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
பேருந்து சேவையை வழங்கும் போது கோவிட்-19 தொற்று பறவாத படி, ஒவ்வொரு பயணத்திற்கு இடையிலும் பேருந்துகளைக் கிருமிநாசினிகள் தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். பயணிகளை மாஸ்க் இல்லாமல் பயணிக்க அனுமதிக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

















