Connect with us

வணிகம்

2020-ம் ஆண்டு இந்தியர்களின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு.. ஐஎம்எப் ஷாக் ரிப்போர்ட்!

Published

on

2020-ம் ஆண்டு இந்தியர்களின் தனிநபர் உள்நாட்டு உற்பத்தி, வங்கதேசத்தை விடக் குறைவாகச் சரியும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

வங்க தேசத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2020-ம் ஆண்டு 4 சதவீதம் அதிகரித்து 1,888 அமெரிக்க டாலர்களாக இருக்கும்.

அதே நேரம் இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.5 சதவீதம் சரிந்து 1,877 டாலர்களாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் கூறியுள்ளது.

2014-ம் ஆண்டு இந்தியர்களின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வங்க தேசத்தை விட 44 சதவீதம் அதிகரித்து இருந்தது. 2020-ம் ஆண்டு இது சரிந்து இருந்தாலும் அடுத்த ஆண்டு 8.8 சதவீதம் வரை இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி அடையும். சீனாவின் மொத்த தனிநபர் உற்பத்தி வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Build course landing pages with video previews, countdown timers, and Stripe checkout at a flat 5% fee..