தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று 5892 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோன பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4.45 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இன்று 6110 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதே நேரம் 92 பேர் கொரோனா தொற்றால் இன்று தமிழகத்தில் இறந்துள்ளனர். எனவே தமிழகத்தில் மொத்த கொரோனா உயிரிழப்பு 7608 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2814 நபர்கள் சென்னையில் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


















